லெஸ்டரை தடுத்து நிறுத்திய சிட்டி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் தொடரில் தனது புதிய எதிரியாக உருவெடுத்து வரும் லெஸ்டருக்குத் தோல்வியை பரிசளித்தது மான்செஸ்டர் சிட்டி.

நேற்று அதிகாலை நடந்த இந்த ஆட்டத்தில் 3-1 என வாகை சூடியது மான்செஸ்டர் சிட்டி.

இதன் மூலம் 11 ஆட்டங்களாக தொடர்ந்த லெஸ்டரின் தோல்வியில்லா பயணம் முடிவுக்கு வந்தது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் கெவின் டி பிரய்ன கோல் முயற்சி பலனளிக்கவில்லை என்றாலும் அவர் பந்தை கோல் வலைக்குள் நோக்கி அனுப்பிய விதம் அனைவரையும் கவர்ந்தது.

22வது நிமிடத்தில் லெஸ்டர் குழுவின் நம்பிக்கை நட்சத்திரம் ஜேமி வார்டியின் கோலால் லெஸ்டர் முன்னிலை பெற்ற போது, சிட்டியின் வெற்றி சற்று சந்தேகத்திற்கு இடமானது.

கடைசியாக தனது இதே சொந்த மைதானத்தில் மேன்யூவி டம் அடைந்த தோல்வியாலும் சிட்டி ரசிகர்களிடையே பதற்றம் நிலவியது.

ஆனால், அடுத்த எட்டாவது நிமிடத்தில் லெஸ்டரின் கோலைச் சமன் செய்தார் மஹ்ரேஸ்.

அடுத்தடுத்த வந்த சிட்டியின் பல பந்துகளைக் கோலாக விடா மல் தடுத்தனர் லெஸ்டர் வீரர்கள். ஆனால் சிட்டியின் வெற்றியை அவர்களால் நீண்ட நேரம் தடுக்க முடியவில்லை.

43வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கன்டோகன் கோலாக மாற்ற சிட்டி ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

69வது நிமிடத்தில் ஜீசஸ் இன்னோர் கோல் போட சிட்டி வெற்றி உறுதியானது.

சிட்டியின் இந்த வெற்றியால், பட்டியலில் லெஸ்டரின் இரண்டாவது இடத்திற்கு முன்னேற முடியவில்லை என்றாலும் அக்குழுவுடனான புள்ளி இடைவெளியை ஒன்றாக குறைக்க முடிந்தது.

சிட்டியின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்த கெவின் டி பிரய்னவின் தாக்குதல் ஆட்டத்தைப் பாராட்டிய அதன் நிர்வாகி பெப் கார்டியோலா, “பிரய்ன அற்புதமான ஆட்டக் காரர். இது அவருடைய மிகச் சிறந்த ஆட்டம்.

“அவர் ஒரு போராளி. தன் குழுவிற்கு வெற்றியைப் பெற்று தந்துள்ளார். அவருடைய மிகச் சிறந்த ஆட்டம் இது,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!