நான்கரை ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கார்லோ அன்சிலோட்டி எவர்ட்டன் நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
எவர்ட்டனின் நிர்வாகியாக இருந்த மார்கோ சில்வா கடந்த 6ஆம் தேதி பதவி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அன்சிலோட்டி அப்பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இத்தாலிய காற்பந்துக் குழுவான நேபோலியின் நிர்வாகியாக இருந்த அன்சிலோட்டியும் இம்மாத தொடக்கத்தில் பதவி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மூன்று முறை சாம்பியன்ஸ் லீக் பட்டம் வென்றுள்ள அன்சிலோட்டி, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இங்கிலிஷ் குழு ஒன்றிற்கு நிர்வாகியாக பொறுப்பேற்றுள்ளார்.இதற்கு முன் அவர் செல்சியின் நிர்வாகியாக இருந்தார்.
வரும் 26ஆம் தேதி பர்ன்லிக்கு எதிராக எவர்ட்டன் விளையாடவுள்ள ஆட்டம் அன்சிலோட்டியின் முதல் போட்டியாக இருக்கும்.