கராச்சி: இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் நான்கு பேர் சதம் அடித்து சாதனை படுத்துள்ளனர்.
இப்போட்டியின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 191 ஓட்டங்களும் இலங்கை 271 ஓட்டங்களும் சேர்த்தது.
80 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் இலங்கை இந்த டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2வது இன்னிங்சில் பாகிஸ்தானின் முதல் நான்கு பேட்ஸ்மேன்களும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தொடக்க வீரர்களான ஷான் மசூத், அபித் அலி இணைந்து முதல் விக்கெட்டுக்கு 278 ஓட்டங்கள் குவித்தனர். ஷான் மசூத் 135 ஓட்டங்களும் அபித் அலி 174 ஓட்டங்களும் விளாசினர்.
அடுத்து வந்த அணித் தலைவர் அசார் அலி 118 ஓட்டங்கள் சேர்த்தார். பாபர் அசாம் 100 ஓட்டங்கள் சேர்த்தார்.
இதற்கு முன் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் (122), ராகுல் டிராவிட் (129), வாசிம் ஜாபர் (138), தினேஷ் கார்த்திக் (129) பங்ளாதேஷ் அணிக்கெதிராக சதம் அடித்திருந்தனர்.