வாட்ஃபர்ட்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில், பட்டியலில் கடைசி நிலையில் உள்ள வாட்ஃபர்ட் காற்பந்துக் குழுவிடம் 2-0 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் சறுக்கியது.
வாட்ஃபர்ட்டின் சொந்த அரங்கில் நடந்த இந்த ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் மேன்யூ கோல்காப்பாளர் டாவிட் ட கயாவின் சொதப்பல் காரணமாக வாட்ஃபர்ட்டுக்கு எளிதாக ஒரு கோல் கிடைத்தது. நான்கு நிமிடங்கள் கழித்து வாட்ஃபர்ட் குழு கோல் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியது.
இந்த ஆட்டத்திற்கு முன்னதாக டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர், மான்செஸ்டர் சிட்டி உள்ளிட்ட குழுக்களை வென்றிருந்தது மேன்யூ.
ஆனால், இந்த ஆட்டத்தில் மேன்யூவிற்காக களமிறங்கிய பால் போக்பா உள்ளிட்ட வீரர்களால் சமநிலையைக்கூட தேடித் தர முடியாதது அக்குழு ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.