சிந்துவை 'இதயமற்றவர்' என கூறியவருக்கு தந்தை பதிலடி

சிந்துவை 'இதயமற்றவர்' என கூறியவருக்கு தந்தை பதிலடி

1 mins read
c2151c9b-58c0-40f5-b4d9-303956c1415d
தென்கொரிய பயிற்றுவிப்பாளர் கிம் ஜி ஹியுனுடன் பி.வி.சிந்து. படம்: இணையம் -

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை 'இதயமற்றவர்' என்று அவரது தென்கொரிய பயிற்றுவிப்பாளர் கிம் ஜி ஹியுன் அண்மையில் விமர்சித்திருந்ததற்கு சிந்துவின் தந்தை பதிலடி தந்துள்ளார்.

உலக வெற்றியாளர் பட்டத்தை சிந்து வென்றதற்குக் காரணமாக விளங்கியவர் கிம். தமது கணவருக்கு உடல்நலம் சுகம் இல்லாத காரணத்தால் பயிற்றுவிப்பாளர் பொறுப்பிலிருந்து கிம் விலகியிருந்தார்.

அண்மையில் கொரிய யூடியூப் ஒளிவழிக்கு கிம் அளித்த பேட்டி ஒன்றில், சிந்துவை 'இதயமற்றவர்' என வர்ணித்திருந்தார். தமக்கு உடல்நலம் சுகமில்லாத காரணத்தால் மருத்துவமனையில் தாம் அனுமதிக்கப்பட்டிருந்ததாகக் கூறிய அவர், "நான் எப்போது மீண்டும் பயிற்றுவிப்பாளர் பொறுப்புக்குத் திரும்புவேன் என்பது மட்டுமே சிந்துவுக்கு அக்கறையாக இருந்தது," என்று குறைகூறினார்.

கிம்மின் இந்தக் கருத்து குறித்து வேதனை தெரிவித்துள்ள சிந்துவின் தந்தை ரமணா, "கிம்முக்கு உடல்நலம் சரியில்லாதது எங்களுக்குத் தெரியாது. அவருக்கு உடல்நலம் எப்படி இருந்தது என்பது பற்றி சிந்துவிடம் எவரும் தெரிவிக்கவில்லை," என்று சொன்னார்.

"பயிற்சிக்கு கிம் திரும்பாததைத் தொடர்ந்து அவர் ஏன் வரவில்லை என சிந்து தொலைபேசியில் அழைத்து அவரிடம் கேட்டபோதுதான் சிந்துவுக்கு நிலவரம் தெரிய வந்தது. கிம்முக்கு உடல்நலம் சரியில்லாதது சிந்துவிற்கு முன்பே தெரிந்திருந்தால் அவர் மருத்துவமனைக்கு விரைந்திருக்க மாட்டாரா?" என ரமணா கேள்வி எழுப்பினார்.