பும்ரா, தவானுக்கு இடம்; ரோகித், ஷமிக்கு ஓய்வு

புதுடெல்லி: இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர், அதன்பின் நடக்கவிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகிய இரண்டிலும் பங்கேற்கவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

காயத்தால் அவதிப்பட்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவும் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானும் அணிக்குத் திரும்பி உள்ளனர்.

அதே வேளையில், இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மாவுக்கும் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமிக்கும் இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்கெதிரான டி20 தொடர் ஜனவரி 5ஆம் தேதியும் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் போட்டித் தொடர் ஜனவரி 14ஆம் தேதியும் தொடங்குகின்றன.

இந்திய டி20 அணி: விராத் கோஹ்லி (அணித் தலைவர்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ரிஷப் பன்ட், ஷிவம் துபே, யுஸ்வேந்திர சகல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், நவ்தீப் சைனி, ஜஸ்பிரீத் பும்ரா, வாஷிங்டன் சுந்தர்.

இந்திய ஒருநாள் அணி: விராத் கோஹ்லி (அணித் தலைவர்), ரோகித் சர்மா (துணைத் தலைவர்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், ரிஷப் பன்ட், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சகல், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, ஜஸ்பிரீத் பும்ரா, ஷர்துல் தாக்குர், முகம்மது ஷமி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!