லண்டன்: எவர்ட்டன் காற்பந்துக் குழுவை சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் பங்கேற்க வைப்பதே தமது நீண்டகால இலக்கு என்று அதன் புதிய நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள கார்லோ அன்சலோட்டி தெரிவித்துள்ளார்.
இது, அவர் எட்டாண்டுகளுக்கு முன் பிரான்சின் பிஎஸ்ஜி குழுவில் வெற்றிகரமாக முடித்த பணியைப் போன்றது என்று காற்பந்து விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஐரோப்பிய கண்டத்தில் அதிக சாதனைகளைப் படைத்துள்ளவராகக் கருதப்படும் அன்சலோட்டி , அண்மையில் எவர்ட்டன் நிர்வாகியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவர் ஏசி மிலான், செல்சி, பிஎஸ்ஜி, ரியால் மட்ரிட், பயர்ன் மியூனிக் என பல குழுக்களில் சிறப்பாகப் பணியாற்றி வாகை சூடியது குறிப்பிடத்தக்கது.
எனினும், பிரிமியர் லீக் புள்ளிப் பட்டியலில் 15வது இடத்தில் உள்ள எவர்ட்டனை எழுச்சிபெற வைத்து, பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் வர வைப்பது சவாலான ஒன்று என விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால், “சாம்பியன்ஸ் லீக் போட்டி நீண்டகால இலக்கு. எதுவுமே முடியாததல்ல,” என்கிறார் அன்சலோட்டி.