லண்டன்: முன்னணி கிரிக்கெட் சஞ்சிகையான ‘விஸ்டன்’, கடந்த பத்தாண்டுகளுக்கான கனவு டெஸ்ட் அணியை அறிவித்து இருக்கிறது. அதில் இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லி, தமிழக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் (படம்) ஆகியோர் இடம்பிடித்து உள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களைக் கொண்ட அணியாக உருவெடுத்துள்ளபோதும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எவருக்கும் இடம் கிடைக்கவில்லை.
விஸ்டன் கனவு டெஸ்ட் அணி: அலெஸ்டர் குக், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் (மூவரும் இங்கிலாந்து), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் (இருவரும் ஆஸ்திரேலியா), விராத் கோஹ்லி, அஸ்வின் (இருவரும் இந்தியா), ஏபி டி வில்லியர்ஸ், டேல் ஸ்டெய்ன், ககிசோ ரபாடா (மூவரும் தென்னாப்பிரிக்கா), குமார் சங்ககாரா (இலங்கை).