புதுடெல்லி: விஸ்டனின் இந்த ஆண்டின் சிறந்த ஐந்து வீரர்கள் பட்டியலில் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லிக்கு இடம் கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலியா - நியூசி லாந்து, தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியுடன் இந்த ஆண்டிற்கான கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்தன.
2010 முதல் 2019 வரை பத்து ஆண்டுகளில் கிரிக்கெட்டில் நடந்த சம்பவங்களில் சிறப்பானவை நினைவுகூரப்பட்டன.
அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சார்பில் இந்த பத்து ஆண்டுகளில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணியைத் தேர்வு செய்து வெளியிட்டது. இதில் டோனியை அணித் தலைவராக தேர்வு செய்திருந்தது. அதேபோல் விராத் கோஹ்லியை டெஸ்ட் அணித் தலைவராக தேர்வு செய்திருந்தது. இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் விஸ்டன் இந்த பத்து ஆண்டுகளில் சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்களைத் தேர்வு செய்துள்ளது. இதில் கோஹ்லி இடம்பெற்றுள்ளார்.