இபிஎல் பட்டத்தை நோக்கி லிவர்பூல்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்திற்கான போட்டியில் தனது பிடியை மேலும் இறுக்கமாக்கியுள்ளது லிவர்பூல் காற்பந்துக் குழு.

பட்டியலில் தன்னை அடுத்து, இரண்டாம் நிலையில் இருக்கும் லெஸ்டர் சிட்டி (நேற்றைய மான்செஸ்டர் சிட்டி-உல்வ்ஸ் ஆட்டத்திற்கு முந்தைய நிலை) குழுவிற்கு 4-0 என்ற கோல் கணக்கில், அதன் சொந்த அரங்கில் வைத்தே மரண அடி கொடுத்தது லிவர்பூல். இதை அடுத்து, லிவர்பூலுக்கும் லெஸ்டருக்கும் இடையிலான புள்ளி வித்தியாசம் 13ஆக அதிகரித்தது. லெஸ்டரைவிட லிவர்பூல் ஓர் ஆட்டம் குறைவாக விளையாடியிருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

பிரேசில் வீரர் ரொபர்ட்டோ ஃபர்மினோ லிவர்பூலுக்காக இரண்டு கோல்களை அடித்தபோதும் இளம் இங்கிலிஷ் ஆட்டக் காரர் டிரென்ட் அலெக்சாண்டர் ஆர்னல்டே ஆட்டநாயகனாக மிளிர்ந்தார்.

“தற்காப்பு ஆட்டக்காரராக இருந்தாலும் அவர் பந்தை அனுப்பியவிதம் ஒரு மத்திய திடல் ஆட்டக்காரரைப் போல அவ்வளவு துல்லியமாக இருந்தது,” என முன்னாள் லிவர்பூல் நிர்வாகியும் இப்போதைய லெஸ்டர் நிர்வாகியுமான பிரெண்டன் ரோஜர்ஸ் பாராட்டினார்.

இரண்டாம் பாதியில் பெனால்டி மூலம் ஜேம்ஸ் மில்னர் ஒரு கோலை அடிக்க, அதன்பின் ஃபர்மினோவின் கால்கள் மூலம் மீண்டும் ஒரு கோல் வந்தது.

இந்த மூன்று கோல் வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தந்ததோடு மனநிறைவுகொள்ளாத ஆர்னல்ட், கடைசியாக தன் பங்கிற்கும் ஒரு கோலை அடித்து, ஆட்டத்தை முடித்து வைத்தார்.

ஆர்னல்டின் ஆட்டத்திறன் அற்புதம் என மெச்சிய லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப், அதே நேரத்தில் தற்போதைக்கு ‘ரைட் பேக்’ நிலையில் உலகின் மிகச் சிறந்த ஆட்டக்காரர் அவர்தானா என்ற கேள்விக்கு விடையளிக்க மறுத்துவிட்டார்.

லிவர்பூலின் இந்த அற்புதமான வெற்றி, முப்பதாண்டு களுக்குப் பிறகு அக்குழு பிரிமியர் லீக் பட்டத்தை வெல்வது நிச்சயம் என்பதை உரத்துக் கூறும் விதமாக இருந்தது.

யுனைடெட் எழுச்சி

கடந்த வார இறுதியில் வாட்ஃபர்ட் குழுவிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோற்று அதிர்ச்சியளித்த மான்செஸ்டர் யுனைடெட் குழு, நேற்று முன்தினம் பின்னிரவு சொந்த அரங்கில் நடந்த ஆட்டத்தில் நியூகாசல் யுனைடெட் குழுவை 4-1 என்ற கோல் கணக்கில் புரட்டியெடுத்தது.

நியூகாசல் குழு முதலில் கோல் அடித்து முன்னிலை பெற்றபோதும், முற்பாதி ஆட்டத்திலேயே மூன்று கோல்களைப் போட்டு அதனைத் திணறடித்தது மான்செஸ்டர் யுனைடெட் குழு.

ஆட்டத்தின் 24ஆம் நிமிடத்தில் யுனைடெட்டின் கோல் வேட்டையைத் தொடங்கிவைத்தார் ஆன்டனி மார்சியால். மேசன் கிரீன்வுட், மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் ஆகியோர் ஆளுக்கு ஒரு கோலை அடிக்க, பிற்பாதியில் மேலும் ஒரு கோலைப் போட்டார் மார்சியால். இதன்மூலம் யுனைடெட் 28 புள்ளிகளுடன் ஏழாமிடத்திற்கு முன்னேறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!