லண்டன்: ஸ்டாம்ஃபர்ட் பிரிட்ஜ் விளையாட்டரங்கில் சொந்த ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பாக விளையாடி வெற்றிபெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் விளையாடியதே சௌத்ஹேம்டன் காற்பந்துக் குழுவிற்கெதிரான பிரிமியர் லீக் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் தோற்றதற்குக் காரணம் என செல்சி குழுவின் நிர்வாகி ஃபிராங்க் லாம்பார்ட் கூறியுள்ளார்.
2011க்குப் பிறகு சொந்த அரங்கில் செல்சி அடுத்தடுத்து தோற்பது இதுவே முதல்முறை.
“எதிரணியின் தற்காப்பை உடைத்துக்கொண்டு முன்னேறும் வகையில் ஆட்டத்தை மாற்றிக் கொண்டே இருக்கவேண்டும்,” என்ற லாம்பார்ட், புதிய வீரர்களை வாங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.