ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு மேரி கோம் தகுதி

புதுடெல்லி: ஒலிம்பிக் போட்டிக்கான குத்துச்சண்டை தகுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை மேரி கோம் தகுதி பெற்றுள்ளார்.

இந்தத் தகுதிச் சுற்று அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் இந்தியா வைப் பிரதிநிதிக்கும் வீராங் கனையைத் தேர்வு செய்ய புதுடெல்லியில் போட்டி நடைபெற்றது.

இதில் 51 கிலோ உடல் எடைப் பிரிவுக்கான ஆட்டத்தில் ஜூனியர் உலக வெற்றியாளரான தெலுங்கானாவைச் சேர்ந்த நிகாத் ஜரீன், தேசிய வெற்றியாளர் ஜோதி குலியாவைத் தோற்கடித்தார்.

அதே பிரிவில் நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் 6 முறை உலக வெற்றியாளரான மணிப்

பூரைச் சேர்ந்த மேரி கோம், ரிது கிரிவாலை வீழ்த்தினார்.

அதன் பின்னர் தகுதிச் சுற்றின் இறுதிச் சுற்று நேற்று நடைபெற்றது. இதில் 36 வயது மேரி கோம், 23 வயது நிகாத் ஜரீனை எதிர்கொண்டார்.

அனுபவம் வாய்ந்த மேரி கோம் போட்டியின் துவக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தினார். அவரது தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஜரீன் திணறினார்.

இறுதியில் 9-1 என்ற புள்ளிக் கணக்கில் மேரி கோம் வெற்றி பெற்றார். இதன்மூலம், ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் விளையாட மேரி கோம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேரி கோமை நேரடியாக ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு அனுப்ப நிகாத் ஜரீன் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் அவர்களுக்கு இடையே போட்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!