புதுடெல்லி: விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2020ஆம் ஆண்டில் விளையாடும் சுற்றுப் பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இவ்வாண்டைச் சிறப்பாக முடித்துள்ளது.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து அடுத்த ஆண்டு 5ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி அடுத்த மாதம் 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது.
அதன்பின் இந்தியா அடுத்த மாதம் 24ஆம் தேதி முதல் மார்ச் 4ஆம் தேதி வரை நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்கிறது. ஐந்து டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அது விளையாடுகிறது.
அதன்பின் மார்ச் 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாப்பிரிக்க அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
அதன்பிறகு மார்ச் 28ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.
ஜூலை மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
செப்டம்பர் மாதம் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி நடக்கிறது.