புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது கூறியதாவது:-
“இந்திய மூத்த வீரர் டோனி, தனது எதிர்காலத் திட்டம் குறித்து இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி மற்றும் தேர்வாளர்களிடம் நிச்சயம் பேசி இருப்பார்.
“அதுபற்றி விவாதிப்பதற்கு இது சரியான இடம் அல்ல. டோனி என்ன செய்ய விரும்புகிறார் என்பது அவரது முடிவு. அது பற்றி எனக்குத் தெரியாது. இது குறித்து அவரிடம் நான் பேசவில்லை. ஆனால் அவர் இந்திய கிரிக்கெட்டில் ஒரு வெற்றி வீரர்.
அடுத்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அந்த அணியை டெஸ்ட் தொடரில் தோற்கடிப்பதுதான் இந்தியாவுக்கு உள்ள மிகப் பெரிய சவாலாக இருக்கும்.
“2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலி யாவை அவர்களது இடத்தில் வீழ்த்தியபோது அந்த அணியில் முன்னணி வீரர்கள் இல்லை (வார்னர், ஸ்டீவன் ஸ்மித்துக்குத் தடை) என்பதை இந்திய வீரர்கள் அறிவார்கள்,” என்று கங்குலி கூறினார்.