கொச்சி: கேரளா மாநிலம் கொச்சியில் நேற்றிரவு நடைபெற்ற ஐஎஸ்எல் லீக் காற்பந்து ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்சும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் குழுவும் மோதின.
ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் கேரளா அணியின் பர்தோலோமியூ ஆக்பெச்செ கோல் போட்டார். இடைவேளையின்போது 1-0 என கேரளா முன்னிலை வகித்தது.
பிற்பாதி ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் அசாமோ கியான் 50வது நிமிடத்தில் கோல் போட்டு ஆட்டத்தைச் சமன்செய்தார்.
இறுதியில், கேரளா பிளாஸ்டர்ஸ், நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது.
இதன்மூலம் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி தான் ஆடிய 10 ஆட்டங்களில் ஒரு வெற்றி, நான்கு தோல்விகள், ஐந்து
சமநிலைகள் ஆகியவற்றைப் பதிவு செய்து 8 புள்ளிகள் பெற்றுள்ளது.