சிட்னி: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கும் ஆஸ்திரேலிய அணியில் டார்சி ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அணியில் ஷான் அபட் இடம் பிடித்திருந்தார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ‘பிக் பாஷ்’ டி20 லீக்கில் ஷான் அபட் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். அவருக்கு இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதற்காக நான்கு வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அபட் இந்தியா தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்குப் பதிலாக டார்சி ஷார்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா அணியில் ஏற்கெனவே மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசல்வுட், கேன் ரிச்சர்ட்சன் ஆகிய வேகப் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இதனால் முதல் வரிசை பந்தடிப்பாளரான டார்சி ஷார்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.