முதல் வெற்றிக்கு அர்டேட்டா ஆர்வம்

லண்டன்: சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஆர்சனல், மான்செஸ்டர் யுனைடெட் குழுக்கள் மோதும் ஆட்டம் என்றாலே காற்பந்து ரசிகர்களுக்குப் பெரும் கொண்டாட்டமாக இருக்கும். அந்த நிலைமை இன்று தலைகீழாகிப் போனது வேதனை!

அப்படி, இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் முதலிடம் எனக்கா, உனக்கா என மல்லுக்கட்டிய குழுக்கள், இன்று முதல் நான்கு இடங்களுக்குள் வருவதற்கே தவியாய்த் தவித்து வருகின்றன.

ஆர்சனலின் நிலைதான் படுமோசம். கடைசியாக ஆடிய 15 ஆட்டங்களில் அக்குழு ஒன்றில் மட்டுமே வென்றிருக்கிறது. இருந்தபோதும், புதிய நிர்வாகியாக மிக்கெல் அர்டேட்டா பொறுப்பேற்றபிறகு அக்குழுவினரின் முகங்களில் நம்பிக்கை ஒளி தென்படத் தொடங்கி உள்ளதை போர்ன்மத், செல்சி குழுக்களுக்கு எதிரான ஆட்டங்களில் காண முடிந்தது.

யுனைடெட்டைப் பொறுத்தமட்டில், நிலையில்லாத செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.

முன்னணிக் குழுக்களுக்கு எதிரான ஆட்டங்களில் கடும் போட்டியைக் கொடுக்கும் யுனைடெட், பட்டியலின் கீழ்நிலையில் இருக்கும் குழுக்களிடம் வெற்றியைக் காவு கொடுப்பது புதிராகவும் விந்தையாகவும் இருக்கிறது.

ஆயினும், ஆன்டனி மார்சியால், மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் ஆகிய இளம் வீரர்கள் தொடர்ந்து கோல் அடித்து வருவதால் ‘விரைவில் பழைய நிலையை எட்டுவோம்’ என்ற நம்பிக்கை யுனைடெட் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தற்காப்பில் ஆர்சனலின் ஸ்கோட்ரன் முஸ்டாஃபி சொதப்பி வரும் நிலையில் சாக்ரடிஸ் பபாஸ்தபோலோஸ் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, ஹெக்டர் பெல்லரின், கேப்ரியல் மார்ட்டினெல்லி ஆகியோரும் களமிறங்க ஆயத்தநிலையில் உள்ளனர் என நிர்வாகி அர்டேட்டா நம்புகிறார்.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆட்டத்தில் விளையாடாத கிரானிட் ஸாக்கா, யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டத்தில் களம் புகுவாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. ஏனெனில், ஜெர்மனியின் ஹெர்த்தா பெர்லின் குழுவிற்கு அவர் விரைவில் மாறக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, காயத்தில் இருந்து மீண்டுள்ள பிரெஞ்சு மத்தியத் திடல் ஆட்டக்காரர் பால் போக்பா, ஆர்சனலின் எமிரேட்ஸ் அரங்கில் நடக்கும் நாளைய ஆட்டத்தில் விளையாடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, ஏரென் வான் பிஸாக்கா, லூக் ஷா ஆகியோரும் களமிறங்க வாய்ப்புள்ளது.

செல்சிக்கு எதிரான ஆட்டத்தில் முன்னிலை பெற்றும் வெற்றி வாய்ப்பைப் பறிகொடுத்ததால், ஆர்சனல் நிர்வாகியாக யுனைடெட்டுக்கு தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்ய ஆர்வமாக இருக்கிறார் அர்டேட்டா.

புள்ளிவிவரமும் அவருக்குச் சாதகமாகவே உள்ளது. யுனைடெட் உடன் கடைசியாக மோதிய மூன்று முறையும் ஆர்சனல் தோற்றதில்லை.

இவ்விரு குழுக்களும் இதுவரை 231 முறை மோதியுள்ளன. அதில் யுனைடெட் 99 முறையும் ஆர்சனல் 83 முறையும் வென்றுள்ளன. கடந்த பருவத்தில் எமிரேட்ஸ் அரங்கில் இவ்விரு குழுக்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஆர்சனல் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!