துபாயில் நடைபெற்ற 'குளோப் காற்பந்து விருதுகள்' நிகழ்ச்சியில் சென்ற ஆண்டின் சிறந்த காற்பந்து வீரருக்கான விருதைத் தட்டிச் சென்றார் போர்ச்சுகல் அணித்தலைவரும் இத்தாலியின் யுவென்டஸ் குழுவிற்காக விளையாடி வருபவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ (இடது). 2011ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விருதை ரொனால்டோ தொடர்ந்து 4வது ஆண்டாகவும் ஒட்டுமொத்தத்தில் 6வது முறையாகவும் வென்றுள்ளார். சென்ற பருவத்தில் யுவென்டஸ் சார்பில் 28 கோல்களை அடித்த இவர், இந்தப் பருவத்தில் இதுவரை 12 கோல்களைப் போட்டுள்ளார். சிறந்த குழுவாக லிவர்பூலும் அக்குழுவின் யர்கன் கிளோப் சிறந்த நிர்வாகியாகவும் தேர்வு செய்யப்பட்டனர். படம்: ராய்ட்டர்ஸ்
ஆறாவது முறையாக சிறந்த வீரர் விருது
1 mins read
துபாயில் நடைபெற்ற 'குளோப் காற்பந்து விருதுகள்' நிகழ்ச்சியில் சென்ற ஆண்டின் சிறந்த காற்பந்து வீரருக்கான விருதைத் தட்டிச் சென்றார் போர்ச்சுகல் அணித்தலைவரும் இத்தாலியின் யுவென்டஸ் குழுவிற்காக விளையாடி வருபவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ (இடது). -

