மார்ச் 29 முதல் ஐபிஎல் போட்டிகள்

மார்ச் 29 முதல் ஐபிஎல் போட்டிகள்

1 mins read

மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 29ஆம் தேதி முதல் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மும்பை வான்கடே விளையாட்டரங்கில் நடக்கும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் என்று டெல்லி கேப்பிட்டஸ் அணி நிர்வாகி ஒருவர் சொன்னதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த நேரத்தில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அனைத்துலகப் போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. ஆகையால், அவ்வணி வீரர்களை ஏலம் எடுத்துள்ள அணிகள் தொடக்கத்தில் ஒரு சில போட்டிகளை அவர்களின்றி ஆட வேண்டியிருக்கும்.