புதுடெல்லி: ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிக்கு சிறந்த அணித் தலைவராக டோனியை அந்த இணையத் தளம் தேர்வு செய்துள்ளது. 2011ஆம் ஆண்டு டோனி தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை வென்று சாதித்தது. இதனால் அவரை சிறந்த அணித் தலைவராக தேர்வு செய்து இருக்கிறது. அவர் இந்த 10 ஆண்டுகளில் 5640 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 170 கேட்ச் பிடித்துள்ளார். 72 ஸ்டம்பிங் செய்துள்ளார். ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் சிறந்தவரான டோனி 20 ஓவர் ஆட்டங்களில் 5396 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 138.04 ஆகும். 154 கேட்ச் பிடித்துள்ளார். 77 ஸ்டம்பிங் செய்துள்ளார்.
சிறந்த அணித் தலைவர் டோனி
1 mins read
விராத் கோஹ்லியுடன் உரையாடும் டோனி. கோப்புப்படம்: ஏஎப்பி -

