நட்டா‌ஷாவை கரம்பிடிக்கிறார் பாண்டியா

நட்டா‌ஷாவை கரம்பிடிக்கிறார் பாண்டியா

1 mins read
0e4d7c41-9563-4993-99bd-8e0f63d40751
நடிகை நட்டா‌ஷாவுடன் இந்திய கிரிக்கெட் அணியின் ஹார்திக் பாண்டியா. படம்: ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராம் -

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ஹார்திக் பாண்டியா. காதலியான நடா‌ஷாவுடன் பாண்டியா டேட்டிங் செய்து வருவதாகச் சில காலமாகவே தகவல்கள் சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருந்தன. ஆனால் ஹார்திக் பாண்டியா இதுகுறித்து ஏதும் பேசாமல் மவுனம் காத்து வந்தார். இந்நிலையில் நடிகை நட்டா‌ஷா ஸ்டான்கோவிச் உடனான தனது காதலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். புத்தாண்டு தினத்தன்று ஹார்திக் பாண்டியா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலியுடன் கைப்பிடித்தபடி ஒரு படத்தைப் பகிர்ந்துகொண்டார். அதில், ''எனது பட்டாசுடன் இந்த ஆண்டைத் தொடங்குகிறேன்'' என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இருவரின் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள்.