சிட்னி: டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடிவரும் லாபஸ்ஷாக்னே ஆஸ்திரேலிய அணியின் அடுத்த தலைவராவார் என்று அவ்வணியின் முன்னாள் அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
டேவிட் வார்னர், ஸ்மித் தடையின்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி மிகப் பெரிய அளவில் தடுமாறியது. அவர்கள் வந்தபின் ஆஷஸ் தொடரில் இருந்து அந்த அணி வேகம் எடுத்துள்ளது.
ஆஷஸ் தொடரின்போது ஸ்மித்திற்கு மாற்றாக வந்த மார்னஸ் லாபஸ்ஷாக்னே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் கோடைக்கால பருவத்தில் தொடர்ந்து பல ஓட்டங்களை அவர் குவித்து வருகிறார்.
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு டெஸ்ட்டுகளிலும் சதம் அடித்த லாபஸ்ஷாக்னே, நியூசிலாந்துக்கு எதிரான பெர்த் டெஸ்ட்டிலும் சதம் அடித்தார்.
மெல்பர்ன் டெஸ்ட்டில் ஏமாற்றம் அளித்தாலும் நேற்று முன்தினம் தொடங்கிய சிட்னி டெஸ்ட்டில் சதம் அடித்துள்ளார். கடந்த ஐந்து போட்டிகளில் நான்கு சதம் விளாசியுள்ளார். தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் லாபஸ்ஷாக்னேவை அடுத்த அணித் தலைவராகப் பார்ப்பதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
மார்னஸ் லாபஸ்சாக்னே எதிர்காலம் குறித்து ரிக்கி பாண்டிங் செய்தியாளர்களிடம் பேசினார்.
“டிம் பெய்ன் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெறும் வயதை எட்டவில்லை. கடந்த வாரம் மெல்பர்னில் நடைபெற்ற போட்டியில் அவருடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போது டிராவிஸ் ஹெட் துணை அணித் தலைவராக உள்ளார். அடுத்த 12 முதல் 18 மாதங்களில் மார்னஸ் லாபஸ்ஷாக்னேவும் அணித் தலைவர் பதவிக்குத் தகுதியானவர் என்ற பேச்சு மெல்ல மெல்ல தொடங்கும் அளவிற்கு அணியில் அவரை நிலைநிறுத்திக் கொள்வார். தற்போதைய அணித் தலைவர் அணியில் இருந்து விலகும்போது அவர் சரியான நபராக இருப்பார்.