வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் 45 ஓட்டங்கள் எடுத்து ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

3 விக்கெட்டுகள் இழப்புக்கு 283 ஓட்டங்கள் என்று முதல் நாளில் சேர்த்திருத்த ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்டத்தில் 171 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலிய அணியின் லாபஸ்ஷாக்னே இரட்டைச் சதம் அடித்தார்.

அபாரமாக ஆடிய லாபஸ்ஷாக்னே 363 பந்துகளில் 19 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 215 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அவர் 181 ஓட்டங்கள் சேர்த்திருந்தபோது, இரட்டைச் சதம் அடிக்க 19 ஓட்டங்கள் தேவைப்பட்டன. ஆனால், அந்த 19 ஓட்டங்களை அடிப்பதற்காக ஏராளமான பந்துகளை வீணாக்கி மிக நிதானமாக இரட்டைச் சதத்தைப் பதிவு செய்தார்.

ஆஸ்திரேலிய அணியில் லாபஸ்ஷாக்னேவுக்கு அடுத்து ஸ்மித் 63 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவர்கள் இருவர் மட்டுமே ஓரளவுக்கு சொல்லிக்கொள்ளும்படியான ஓட்டங்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் நடையைக் கட்டினர்.

குறிப்பாக வார்னர் (45), வாட் (22), பெய்ன் (35), ஹெட்(10) ஆகியோர் குறைந்த ஓட்டங்களில் வெளியேறினர்.

டெஸ்ட் போட்டிகளில் அதிகமான பந்தடிப்பு சராசரி வைத்திருப்பவர் ஆஸ்திரேலிய வீரர் டான் பிராட்மேன்.

இவரது சராசரி 99.94 ஆகும். அதற்கு அடுத்து இதுவரை ஸ்மித் 62.84 சராசரி வைத்திருந்தார். ஆனால், லாபஸ்ஷக்னேவின் தனித்துவமான பந்தடிப்பால் ஸ்மித்தைப் பின்னுக்குத் தள்ளி 63.63 சராசரி வைத்துள்ளார்.

இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள லாபஸ்ஷாக்னே 1,400 ஓட்டங்கள் சேர்த்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணியில் மூன்றாவது இடத்தில் களமிறங்கி இரட்டைச் சதம் அடித்த முதல் வீரரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நாளில் நேற்று முன்தினம் ஆஸ்திரேலிய அணியின். மாத்யூ வாட் 22 ஓட்டங்களிலும் லாபஸ்ஷாக்னே 130 ஓட்டங்களிலும் நேற்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

மாத்யூ வாட் கூடுதலாக ஓட்டம் ஏதும் சேர்க்காமல் 22 ஓட்டங்களில் சோமர்வில்லே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கேப்டன் பைன், லாபஸ்ஷாக்னேவுக்கு ஈடுகொடுத்து விளையாடினார். லாபஸ்ஷாக்னே 253 பந்துகளில் 150 ஓட்டங்களை எட்டினார்.

இருவரும் ஓரளவுக்கு நிலைத்து ஆடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 79 ஓட்டங்கள் சேர்த்துப் பிரிந்தனர். பெய்ன் 35 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் நிதானமாக பந்தடித்த லாபஸ்ஷாக்னே 346 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து ஆஸ்லே பந்துவீச்சில் 215 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

கடைசி வரிசை வீரர்களான பாட் கம்மின்ஸ் 8 ஓட்டங்களிலும் பட்டின்ஸன் (2) ஓட்டங்களிலும் வெளியேறினர். மிட்ஷெல் ஸ்டார்க் 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 150.1 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 454 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

லாபஸ்ஷாக்னே ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் அடுத்து வந்த பந்தடிப்பாளர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். கடைசி 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணி இழந்தது குறிப்பிடத்தக்கது.

நியூஸிலாந்து தரப்பில் கிராண்ட்ஹோம், வாக்னர் தலா 3 விக்கெட்டுகளையும் ஆஸ்லே 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அடுத்து பந்தடித்த நியூசிலாந்து சிறப்பாகச் செயல்பட்டது. ஆஸ்திரேலியாவை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் எனக் களமிறங்கிய லேதமும் புளன்டலும் இணைந்து முனைப்புடன் பந்தடித்தனர்.

ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள் வீசிய பந்தை இருவரும் பறக்கவிட்டனர்.

நேற்றைய ஆட்டம் முடிந்தபோது நியூசிலாந்து விக்கெட் எதையும் இழக்காமல் 63 ஓட்டங்களை எடுத்தது. இருப்பினும், 391 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா வலுவான நிலையில் உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!