மீண்டும் சேதப்படுத்தப்பட்ட இப்ராஹிமோவிச் சிலை

மீண்டும் சேதப்படுத்தப்பட்ட இப்ராஹிமோவிச் சிலை

1 mins read

சுவீடன்: சுவீடனின் முன்னாள் காற்பந்து வீரர் ஸ்லாட்டான் இப்ராஹிமோவிச்சின் சிலையை

நாசவேலைக்காரர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் சிலைக்குப் பக்கத்தில் சுவீடன் மொழியில் எழுதப்பட்ட 'எடுத்துச் செல்லுங் கள்' என்ற கிறுக்கல் வாசகமும் இருந்தது.

சிலையின் முகம் ஸ்வீடன் நாட்டுப் பட்டையைக் கொண்ட சட்டையால் மூடப்பட்டிருந்தது.

மால்மோவின் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு துறை

யின் செய்தித் தொடர்பாளர் இந்தச் சிலை பழுதுபார்க்க எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்றும் சிலையை மீண்டும் கொண்டு வருவதே திட்டம் என்றும் சொன்னார்.

கடந்த டிசம்பர் மாதம் பரம எதிரி காற்பந்துக் குழுவில் இப்ராஹிமோவிச் முதலீடு செய்ததைத் தொடர்ந்து அவரது சிலையின் மூக்கு துண்டிக்கப்பட்டது.