போர்ச்சுக்கல் காற்பந்து அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (படம்). உலகின் தலைசிறந்த காற்பந்து வீரராகக் கருதப்படும் இவர், இத்தாலியில் உள்ள யுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
நேற்று செர்ரி ஏ-யில் நடைபெற்ற போட்டியில் யுவென்டஸ் - காக்லியாரி அணிகள் மோதின. இதில் யுவென்டஸ் 4-0 என வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 49, 67 (பெனால்டி), 82வது நிமிடங்களில் கோல் அடித்து ஹாட்ரிக் கோலை பதிவு செய்தார்.
இந்த ஹாட்ரிக் கோல் மூலம் காற்பந்தில் 10 வெவ்வேறான தொடர்களில் ஹாட்ரிக் கோல் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
அவர் யூரோப்பியன் சாம்பியன்ஸ் லீக், யூரோப்பியன் நேஷன்ஸ் லீக், உலகக் கிண்ணம், கிளப் உலகக் கிண்ணம், கோபா டெல் ரே, யூரோ தகுதிச் சுற்று, உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று, லா லீகா, பிரிமீயர் லீக், செர்ரி ஏ தொடர்களில் ஹாட்ரிக் கோல்களை அடித்துள்ளார்.

