மும்பை: ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டியில் அதிக அளவில் சாதித்ததில்லை. தென்னாப்பிரிக்கத் தொடரின்போது ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பங்ளாதேஷ் அணிக்கு எதிராகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்தியா தற்போது இலங்கைக்கு எதிராக டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது.
அடுத்த மாதம் நியூசிலாந்து சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அங்குள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். அந்த அணியில் நீல் வாக்னர், மேட் ஹென்ரி, டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்த்து விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. மேலும், அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப இந்திய வீரர்கள் தங்களை மாற்றிக்கொள்வது என்பது கடினம்.
இந்நிலையில் கிரிக்கெட் விளையாடுவதற்கு நியூசிலாந்து எளிதான இடம் இல்லை என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். கடந்த முறை நாங்கள் 0-1 எனத் தொடரை இழந்துள்ளோம். ஆனால், சிறந்த முறையில் விளையாடினோம். ஆனால் அப்போதுள்ள பந்துவீச்சைவிட எங்களுடைய இப்போதைய பந்து வீச்சு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது,'' என்றார்.

