ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பயிற்றுவிப்பாளர் லாங்கருக்கு ஓய்வு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பயிற்றுவிப்பாளர் லாங்கருக்கு ஓய்வு

1 mins read

மும்பை: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்தப் போட்டிகள் ஜனவரி 14 ஆம் தேதி, 17 ஆம் தேதி மற்றும் 19 ஆம் தேதிகளில் முறையே மும்பை, ராஜ்கோட் மற்றும் பெங்களூருவில் நடக்கிறது.

ஆஸ்திரேலிய அணி இந்திய சுற்றுப்பயணத்தின்போது அந்த அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஜஸ்டின் லாங்கர் வரவில்லை. அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் மெக்டொனால்டு தலைமைப் பயிற்றுவிப்பாளராகச் செயல்படுவார். அண்மையில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து 3-0 என ஒயிட்வாஷ் செய்தது.