மண்ணைக் கவ்வியது மேன்யூ

மான்செஸ்டர்: நேற்று அதிகாலை காராபாவ் கிண்ண காற்பந்தின் அரையிறுதிப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி குழு முன்னணி தாக்குதல் வீரர்களான கேப்பிரியல் ஹேசுஸ், ெசர்ஜியோ அகுவேரோ இருவரையும் களமிறக்கவில்லை. அவர்களுக்குப் பதிலாக குறிப்பிட்டுச் சொல்லும்படியான தாக்குதல் ஆட்டக்காரர் எவரும் இல்லாத அணியைக் களமிறக்கியது.

இதில் பெனார்டோ சில்வா, கெவின் டி பிரய்ன் ஆகிய மத்திய திடல் வீரர்களே முன்னணி ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

விளைவு-மான்செஸ்டர் யுனைெடட்டுக்கு எதிரான முதல் கோலை சிட்டியின் பெனார்டோ சில்வா ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் போட்டு யுனைடெட் அணியை நிலைகுலைய வைத்தார்.

பின்னர் இவரே ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் பந்தை ரியாட் மாஹ்ரெசின் பாதையில் செலுத்த அதை அவர் யுனைடெட் கோல்காப்பாளார் டாவிட் ட கியாவை தாண்டி கோல் போட்டார்.

ஐந்து நிமிடங்கள் கழித்து கெவின் டி பிரய்ன யுனைடெட்டின் தற்காப்பு வீரர் ஃபில் ஜோன்சைத் தாண்டி பந்தை எத்த அதை ட கியாவும் தடுத்துவிட்டார். ஆனால், தடுத்த பந்து யுனைடெட்டின் மற்றொரு வீரரான ஆண்டிரியஸ் பெரேரா மேல் பட்டு சிட்டிக்கு மூன்றாவது கோலாக மாறியது.

இப்படி முதல் பாதி ஆட்டத்திலேயே மூன்று கோல்கள் வாங்கி பின்னடைவைச் சந்தித்த மான்செஸ்டர் யுனைடெட் இரண்டாம் பாதி ஆட்டத்தில் சிறிது சுறுசுறுப்புக் காட்டியது. அதன் பயனாக ஆட்டத்தின் 70ஆம் நிமிடத்தில் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் ஒரு கோல் போட்டார்.

இனி, இரண்டாம் சுற்று ஆட்டத்தில் யுனைடெட் கூடுதலாக இரண்டு கோல்கள் போட்டு முன்னணி பெற்று அதனால் கிடைக்கக்கூடிய பெனல்டி வாய்ப்புகளில் வெற்றி பெற்றாலன்றிகாராபாவ் கிண்ணக் கனவை யுனைடெட் மறந்துவிட வேண்டியதுதான்.

அதுமட்டுமல்ல, இந்த ஜனவரி மாதத்தில் அணிக்கு வலுசேர்க்கக்கூடிய வீரர்களை வாங்கவில்லை என்றால் அது பிரிமியர் லீக் தரவரிசையில் முதல் நான்கு இடங்களுக்குள் வரும் கனவையும் மறந்துவிட வேண்டியதுதான் என்று காற்பந்து விமர்சகர்கள் கூறுகின்றனர். மான்ெசஸ்டர் யுனைடெட் தனது பழம் பெருமைய நிலைநாட்ட மத்திய திடல், தாக்குதல் வீரர்களை உடனடியாக வாங்குவது அவசியம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!