'இந்தியாவில் இந்திய கிரிக்கெட் அணியை எதிர்கொள்வது கடினம்'

'இந்தியாவில் இந்திய கிரிக்கெட் அணியை எதிர்கொள்வது கடினம்'

1 mins read
67434287-e544-443d-af5d-b6d49ae759e7
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தலைசிறந்த நட்சத்திர ஆட்டக்காரரான 25 வயது மார்னஸ் லாபஸ்சாக்னே. படம்: ஊடகம் -

மும்பை: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தலைசிறந்த நட்சத்திர ஆட்டக்காரரான 25 வயது மார்னஸ் லாபஸ்சாக்னே (படம்), இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இடம் பிடித்துள்ளார். இந்திய தொடரை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் லாபஸ்சாக்னே, இந்தியாவை இந்திய மண்ணில் எதிர்கொள்வதைவிடக் கடினமானது ஒன்றுமில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லாபஸ்சாக்னே கூறுகையில் ''இந்தியாவில் எப்போதெல்லாம் விளையாடுகிறோமோ, அப்போதெல்லாம் அது கடினமான தொடராகவே இருக்கும். ஏனெனில், அவர்கள் மிகவும் கடினமான எதிரணி. அவர்கள் சிறந்த பந்தடிப்பாளர்கள் மற்றும் சிறந்த பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ளனர். ஆகவே, இந்தத் தொடர் சவாலானதாக இருக்கும் என்று கூறியுள்ளார் லாபஸ்சாக்னே.