ஜெட்டா: கடந்த பருவத்தில் ஒரு கிண்ணத்தைக்கூட வெல்லாமல் ஏமாற்றமளித்த முன்னணி ஸ்பானிய காற்பந்துக் குழுவான ரியால் மட்ரிட், இம்முறை வீழ்த்த முடியாத குழுவாக வலம் வருகிறது. கடைசியாக ஆடிய 15 ஆட்டங்களில் ஒன்றில்கூட அக்குழு தோற்கவில்லை. சவூதியில் நேற்று அதிகாலை நடந்த ஸ்பானிய சூப்பர் கிண்ண அரையிறுதியில் ரியால் 3-1 என்ற கோல் கணக்கில் வெலன்சியாவை வென்றது. ஜெர்மானிய வீரர் டோனி குரூஸ், கார்னரில் இருந்து அற்புதமானதொரு கோலைப் போட்டார்.
வீழ்த்த முடியாத குழுவாக வீறுநடை
1 mins read
ஸ்பானிய சூப்பர் கிண்ண அரையிறுதியில் ஜெர்மானிய வீரர் டோனி குரூஸ், கார்னரில் இருந்து அற்புதமானதொரு கோலைப் போட்டு அசத்தினார். படம்: ஏஎப்பி -

