கோலாலம்பூர்: இந்திய நட்சத்திர பூப்பந்து வீராங்கனைகளான பி.வி.சிந்துவும் சாய்னா நேவாலும் மலேசிய மாஸ்டர்ஸ் தொடரின் காலிறுதிக்கு முன்னேறினர்.
இரண்டாவது சுற்றில் சாய்னா 25-23, 21-12 என்ற செட்களில் தாய்லாந்தின் ஆன் சி யங்கைத் தோற்கடித்தார். ஜப்பானின் அயா ஒகோரியை 21-10, 21-15 என 34 நிமிடங்களில் வீழ்த்தினார் சிந்து.
ஆடவர் பிரிவில் இந்திய வீரர் சமீர் வர்மா, மலேசியாவின் லீ ஸி ஜியாவிடம் 19-21, 20-22 என்ற செட்களில் கடுமையான போராட்டத்திற்குப் பின் வீழ்ந்தார்.

