மில்லியன் டாலருக்கு ஏலம்போன பிரபல கிரிக்கெட் வீரரின் தொப்பி

சிட்னி: டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் வரிசையில் 708 விக்கெட்டுகளுடன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான ஷேன் வார்ன், 50 (படம்).

இந்நிலையில், ஆஸ்திரேலிய காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு உதவுவதற்காக நிதி திரட்டும் முயற்சியில் வார்ன் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியபோது தாம் அணிந்திருந்த ‘பேகி கிரீன்’ எனக் கூறப்படும் பச்சை நிறத் தொப்பியை இவர் ஏலம் விடுவதாக அறிவித்தார்.

எதிர்பார்த்ததற்கும் மேலாக, இவரது தொப்பி 1,007,500 ஆஸ்திரேலிய டாலருக்கு (S$934,700, இந்திய ரூபாய் 4.92 கோடி) ஏலம் போனது. இதன் மூலம் கிரிக்கெட் உலகில் அதிக விலைக்கு ஏலம்போன பொருள் என்ற பெருமையை வார்னின் தொப்பி பெற்றுள்ளது. முன்னதாக, கிரிக்கெட்டின் பிதாமகனாகக் கருதப்படும் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் கடைசி டெஸ்ட் போட்டியில் அணிந்த பச்சை நிறத் தொப்பி 425,000 ஆஸ்திரேலிய டாலருக்கு ஏலம்போனது.

ஏலத்தில் பங்கெடுத்தவர்களுக்கும் தமது தொப்பியை ஏலமெடுத்தவருக்கும் நன்றி கூறிக்கொண்ட வார்ன், ஏலத்தொகை முழுவதும் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் ஆறு முறை உலக வெற்றியாளரான பிரிட்டனின் லூவிஸ் ஹேமில்டன், ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் சிக்கியுள்ள வனவிலங்குகளை மீட்டு, பராமரிப்பதற்காக 500,000 அமெரிக்க டாலரை நன்கொடையாக அளித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!