வெஸ்ட் ஹேம் குழுவை வெற்றி கண்ட ஷெஃபீல்ட்

ஷெஃபீல்ட்: இங்கிலிஷ் பிரிமியர் காற்பந்து லீக்கில் நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வெஸ்ட் ஹேம் யுனைடெட் குழுவை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது ஷெஃபீல்ட் யுனைடெட்.

நடப்பு லீக் பருவத்தில் மறுமலர்ச்சி கண்டுள்ள ஷெஃபீல்ட், இந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றியின் மூலம் லீக் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது (நேற்று நிலவரப்படி).

ஓர் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினால் அடுத்த ஆட்டத்தில் பதிலடி கொடுப்பது ஷெஃபீல்டுக்கு வழக்கமான ஒன்று.

ஆனால், இதற்கு முன்னதாக லீக்கின் இரு முன்னணிக் குழுக்களான லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டிக்கு எதிரான ஆட்டங்களில் 2-0 எனும் கோல் கணக்கில் ஷெஃபீல்ட் தொடர்ச்சியாக மண்ணைக் கவ்வியது.

மீள்திறனுக்குப் பெயர் பெற்ற ஷெஃபீல்ட், இம்முறை வெஸ்ட் ஹேம் உடனான ஆட்டத்தில் உரிய பதிலடியைத் தந்துள்ளது. ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் ஆலிவர் மெக்பர்னி என்பவர் கோல் போட்டு ஷெஃபீல்டுக்கு முன்னணி தந்தார்.

எனினும், ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் ஷெஃபீல்டுக்கு பதற்றம் காத்திருந்தது. வெஸ்ட் ஹேம் குழுவுக்காக ராபர்ட் ஸ்னோட்கிராஸ் என்பவர் எதிரணி வலைக்குள் பந்தைப் புகுத்தினார்.

ஆனால் வெஸ்ட் ஹேம்மின் வேறோர் ஆட்டக்காரரின் தப்பாட்டம் காரணமாக அக்குழுவுக்கு கோல் வழங்க ‘விஏஆர்’ தொழில்நுட்பம் மறுத்துவிட்டது. இதனால் ஷெஃபீல்ட் வீரர்கள் பெருமூச்சுவிட்டனர்.

லீக்கில் இதுவரை 22 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஷெஃபீல்ட், 32 புள்ளிகள் பெற்றுள்ளது.

வெஸ்ட் ஹேம் நிர்வாகியாக டேவிட் மோயஸ் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அக்குழுவுக்கு கிடைத்துள்ள முதல் தோல்வி இது. அக்குழு 22 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் 16வது இடத்தில் உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!