சாதனைகளில் சிறப்பு ஏதும் இல்லை: லிவர்பூல் நிர்வாகி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிகளில் வெற்றி மேல் வெற்றி பெற்றுவரும் லிவர்பூல் அணி நேற்று அதிகாலை நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் ஸ்பர்ஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று தரவரிசையில் அடுத்த நிலையில் உள்ள லெஸ்டர் குழுவைவிட 16 புள்ளிகள் அதிகம் பெற்று அசைக்க முடியாத முன்னிலையைப் பெற்றுள்ளது.

லிவர்பூலின் ஒரே கோலை ஆட்டத்தின் 37ஆம் நிமிட,த்தில் ஃபெர்மினோ போட்டு ஸ்பர்ஸ் அணியின் நிர்வாகப் பொறுப்பை அண்மையில் ஏற்றுள்ள ஜோசெ மொரின்யோவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளார். இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் லிவர்பூல் பெற்றுள்ள புள்ளிகள் சாதனை அளவைத் தொட்டுள்ளன என்றபோதிலும் அது பற்றி லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப்புக்கு சுட்டியபோது அவர் “சாதனைகளில் சிறப்பு ஏதுமில்லை”, என்று கூறியுள்ளார்.

“சாதனை பற்றியெல்லாம் எங்களுக்கும் தெரியும். அது ஒரு சிறப்பு அம்சம்தான், ஆனால் என்னால் அதை உணர முடியவில்லை.

“வெற்றி பெற்று கோப்பையை ஏந்தும்போதுதான் ெவற்றி என ஏற்றுக்கொள்ள முடியும். அதுவரை போராட்டம்தான். இதுதான் ஆரம்பம், தொடர்ந்து நாங்கள் போராட வேண்டியுள்ளளது, ஏனெனில் போட்டியில் இருக்கும் மற்ற குழுக்கள் வலுவானவை.

“மான்செஸ்டர் சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா விட்டுக்கொடுக்கப் போவதில்லை. நானும் விட்டுக் கொடுக்கப்போவதில்லை. இதுவரை நன்றாக நடந்து வருகிறது என எடுத்துக்கொள்ளலாம்”, என்று விளக்கினார். பிரிமியர் லீக்கில் 38 ஆட்டங்களில் கிளோப்பின் லிவர்பூல் வீரர்கள் 104 புள்ளிகள் பெற்று அபார சாதனை புரிந்துள்ளனர். இந்தப் பருவத்தில் விளையாடிய 21 ஆட்டங்கள் அனைத்திலும் அவர்கள் கோல் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய ஆட்டத்தில் இளம் தற்காப்பு வீரர்களை களமிறக்கினார் ஸ்பர்ஸ் நிர்வாகி மொரின்யோ. அவர்களைத் தாண்டி தமது இடது காலால் பந்தை உதைத்து கோலாக்கினார் ஃபெர்மினோ.

ஆனால், இரு கோல் போடும் வாய்ப்புகளை ஸ்பர்ஸ் அணி கோட்டை விட்டதாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது. ஸ்பர்ஸின் முன்னணி தாக்குதல் வீரர் ஹேரி ேகன் காயம் காரணமாக விளையாட முடியாமல் போக, சோன் ஹியூங் மின், கியோவானி லோ செல்சோ ஆகிய இருவரும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை வீணடித்தனர்.

மற்ற ஆட்டங்களில் மான்செஸ்டர் யுனைடெட் அணி நார்விச் அணியை 4-0 என்றும், சௌத்ஹேம்டன் குழு பட்டியலில் இரண்டாம் நிலையிலுள்ள லெஸ்டரை 2-1 என்றும் வெல்ல, கிறிஸ்டல் பேலஸ் அணி ஆர்சனலுடன் 1-1 என சமநிலை கண்டது. மான்செஸ்டர் யுைனடெட்டுக்கு மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் இரண்டு கோல்கள் போட, லெஸ்டர் சிட்டியிடம் சென்ற முறை 9-0 எனத் ேதால்விகண்ட செளத்ஹேம்டன் குழு நேற்று மீண்டெ ழுந்து லெஸ்டரை வீழ்த்தி பழிதீர்த்துக்கொண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!