வருமானத்தில் பார்சா முதலிடம்

பார்சிலோனா: ஒரே பருவத்தில் 800 மில்லியன் யூரோ வருமானம் ஈட்டிய முதல் காற்பந்துக் குழு என்ற பெருமையை பார்சிலோனா தட்டிச்சென்றுள்ளது.

அத்துடன், வருமானப் பட்டியலில் பரம எதிரியான ரியால் மட்ரிட் குழுவை பார்சிலோனா முந்தி இருப்பதும் இதுவே முதல் முறை.

2018-19 பருவத்தில் பார்சிலோனா 840.8 மில்லியன் யூரோ (S$1.262 பில்லியன்) வருமானம் ஈட்டியது. 757.3 மி. யூரோவுடன் ரியால் இரண்டாமிடத்தையும் 711.5 மி. யூரோவுடன் மான்செஸ்டர் யுனைடெட் மூன்றாமிடத்தையும் பிடித்தன. மான்செஸ்டர் சிட்டி குழு (610.6 மி., 6ஆம் நிலை), லிவர்பூல் (604.7 மி., 7ஆம் நிலை),  செல்சி (513.1 மி., 9ஆம் நிலை)ஆகியவை முதல் பத்து இடங்களுக்குள் வந்த மற்ற இங்கிலிஷ் குழுக்கள்.