சுடச் சுடச் செய்திகள்

உல்வ்ஸை வீழ்த்திய மேன்யூ

மான்செஸ்டர்: நேற்று அதிகாலை நடைபெற்ற எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டி ஒன்றில் உல்வ்ஸ் குழுவுக்கு எதிராக அபாரமான கோல் ஒன்றைப் போட்ட யுவான் மாட்டா மான்செஸ்டர் யுனைடெட் குழு அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்தார்.

ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டின் ஆண்டனி மார்சியால் தந்த பந்தை உல்வ்ஸ் கோல்காப்பாளர் பாய்ந்து வந்து தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது லாவகமாக அந்தப் பந்தை அவரது தலைக்கு மேலே தூக்கியடித்து கோலாக்கினார் மாட்டா.

முன்னதாக, உல்வ்ஸ் குழுவின் பெட்ரோ நேட்ோ போட்ட கோலை தொழில்நுட்ப உதவி நடுவர் முறையில் பந்தை உல்வ்ஸ் வீரர் ஒருவர் கையாணடதாகக் கூறி அந்த கோல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், நல்ல தாக்குதல் விளையாட்டைக் வெளிப்படுத்திய யுனைடெட் இந்த வெற்றிக்கு தகுதியான குழுவே என காற்பந்து விமர்சகர்கள் கூறியதாக பிபிசி செய்தித் தகவல் தெரிவிக்கிறது.

இம்மாதம் 4ஆம் தேதி இதே குழுக்களுக்கு இடையே நடைபெற்ற முதல் போட்டி கோலேதும் இன்றி சமநிலையில் முடிந்ததால் நேற்று மீண்டும் போட்டி நடைபெற்றது.

ஆனால், முன்னைய போட்டியில் உல்வ்ஸ் கோல் வலையை நோக்கி கோல் முயற்சி எதுவும் மேற்கொள்ள முடியாமல் தவித்த யுனைடெட் நேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுறது.

நேற்றைய போட்டியில் முதல் பாதியிலேயே மாட்டா உல்வ்ஸ் கோல் வலையை நோக்கி உைத்த பந்தை உல்வ்ஸ் கோல்காப்பாளர் தடுத்து தமது அணியைக் காப்பாற்றினார்.

பின்னர், யுனைடெட்டின் டேனியல் ஜேம்ஸ் அடித்த பந்தையும் தடுத்து உல்வ்ஸை காப்பாற்றினார் என்று கூறப்படுகிறது.

தொடக்கத்திலிருந்தே விறுவிறுப்பான ஆட்டத்தை இரு அணிகளும் வெளிப்படுத்தியபோதிலும் ஆட்டத்தை வெல்லக்கூடிய அந்த நொடிப் பொழுது அபாரத் திறனை யுவான் மாட்டா, 31, எவரும் எதிர்பார்க்காத நேரத்தில் காட்டி யுனைடெட்டின் வெற்றிக்கு வழிகோலினார் என்று காற்பந்து ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

இவருடைய கோலை புகழ்ந்து பேசிய யுனைடெட் நிர்வாகி ஒலே குனார் சோல்சியார், “மாட்டா வேறொரு நிலைக்குச் சென்றுவிட்டார். அவரிடம் திறமை, வேகம், கோல் வலைக்கு முன் நிதானப் போக்கு என அனைத்தும் உள்ளன,” என்று கூறினார்.

நேற்றைய ஆட்டத்தில் மாற்கு ஆட்டக்காரராக 60ஆம் நிமிடத்தில் களமிறங்கிய தாக்குதல் ஆட்டக்காரர் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் காயம் காரணமாக 80வது நிமிடத்தில் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. 

இனி ஞாயிறன்று லிவர்பூலுக்கு எதிராக விளையாட அவர் உடற்தகுதியுடன் இருப்பாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. 

இந்நிலையில், ஆட்டநாயகனாக 18 வயது நிரம்பிய யுனைடெட்டின் பிரண்டன் வில்லையம்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon