ஒப்பந்தத்திலிருந்து நீக்கம்: டோனியிடம் முன்கூட்டியே தெரிவித்துவிட்ட பிசிசிஐ

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலில் அவ்வணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனியின் பெயர் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று முன்தினம் வீரர்களுக்கான ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டது.

‘ஏ+’, ‘ஏ’, ‘பி’, ‘சி’ என நான்கு பிரிவுகளில் மொத்தம் 27 பேர் அதில் இடம்பெற்றுள்ளனர். ஆண்டுக்கு ரூ.7 கோடி பெறும் வீரர்களுக்கான ‘ஏ+’ பட்டியலில் விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா இடம்பெற்றுள்ளனர்.

தமிழக வீரர்களான அஸ்வின் ‘பி’ பிரிவிலும் (ரூ.5 கோடி) வாஷிங்டன் சுந்தர் ‘சி’ பிரிவிலும் (ரூ.1 கோடி) இடம்பெற்றுள்ளனர்.

கடந்த முறை ‘ஏ+’ பிரிவில் இருந்து ‘ஏ’ பிரிவிற்கு இறக்கம் கண்ட 38 வயதான டோனி, இம்முறை பட்டியலிலேயே இடம்பெறவில்லை.

இந்நிலையில், ஒப்பந்தப் பட்டியலில் டோனியின் பெயர் சேர்க்கப்படாதது குறித்து அவருக்கு முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக பிசிசிஐ அதிகாரி ஒருவரைச் சுட்டி ‘பிடிஐ’ செய்தி வெளியிட்டுள்ளது.

“கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து அனைத்துலகப் போட்டி எதிலும் டோனி விளையாடவில்லை. அதனால், இந்த நேரத்தில் அவரது பெயரை ஒப்பந்தத்தில் சேர்க்க முடியாது,” என்று அந்த அதிகாரி விளக்கம் அளித்தார்.

குறிப்பிட்ட காலத்தில் ஒருவர் மூன்று டெஸ்ட் அல்லது எட்டு ஒருநாள் அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான டி20 போட்டிகளில் ஆடியிருந்தால் மட்டுமே பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் அவர் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்பது நடைமுறை விதி.

அதே நேரத்தில், இந்திய டி20 அணியில் டோனி மீண்டும் இடம்பெறும் பட்சத்தில், ஒப்பந்தப் பட்டியலில் அவரது பெயரும் சேர்க்கப்பட்டு, விகிதாச்சார அடிப்படையில் ஒப்பந்தத் தொகை வழங்கப்படும்.

இதனிடையே, ரஞ்சி கிண்ணப் போட்டிகளில் பங்குபெறும் ஜார்க்கண்ட் அணியுடன் சேர்ந்து டோனி நேற்று முன்தினம் பயிற்சியைத் தொடங்கிவிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!