மளமளவென விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா

போர்ட் எலிசபெத்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் மளமளவென விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா ஃபாலோ-ஆன் விளையாட நேர்ந்தது.

பூவா, தலையா வென்று முதலில் பந்தடித்த இங்கிலாந்து, முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 499 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

பென் ஸ்டோக்ஸ் 120 ஓட்டங்களையும் ஒல்லி போப் ஆட்டமிழக்காமல் 135 ஓட்டங்களையும் எடுத்து அணிக்கு வலுச்சேர்த்தனர்.

தென்னாபிரிக்கா அணி சார்பில் மகாராஜ் 5 விக்கெட்டுகளையும், ரபாடா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் விளையாட தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி மூன்றாம் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ஓட்டங்களை எடுத்திருந்தது.

நேற்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், 28 பந்துகளில் நான்கு விக்கெட்டுகளையும் இழந்து ஒரேயொரு ஓட்டம் மட்டுமே எடுத்தது.

209 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்க அணி, ஃபாலோ-ஆன் பெற்று தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சையும் நேற்று விளையாடியது. சிங்கப்பூர் நேரம் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி, தென்னாப்பிரிக்கா 15 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தாமதமானது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!