செவ்வியாவை வீழ்த்தியது ரியால்

மட்ரிட்: செவ்வியா காற்பந்துக் குழுவை 2-1 என போராடி வென்று, லா லீகா பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது ரியால் மட்ரிட். முற்பாதி நேரத்தில் செவ்வியாவின் டி ஜோங் தலையால் முட்டித் தள்ளிய பந்து, காணொளி உதவி நடுவர் முறைக்குப் பின்னர் நிராகரிக்கப்பட்டது.

இதனால் ரியால் மட்ரிட் குழுவின் சொந்த மண்ணில் நடந்த இந்த ஆட்டத்தின் முற்பாதி நேரம் கோல் எதுவுமில்லாமல் முடிந்தது. இந்நிலையில், லூக்கா ஜோவிச் கொடுத்த பந்தை 57வது நிமிடத்தில் கோலாக்கினார் ரியாலின் பிரேசில் வீரர் காசிமிரோ. தனது முதல் கோல் நிராகரிக்கப்பட்ட டி ஜோங், 64வது நிமிடத்தில் தன் குழுவிற்காக மீண்டும் ஒரு கோல் போட்டு, மட்ரிட்டை சமன் செய்தார்.

69வது நிமிடத்தில் காசிமிரோ இன்னோர் கோலைப் போட வெற்றியைத் தனதாக்கி, பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது ரியால் மட்ரிட். ஆனால் பார்சிலோனா நேற்று கிராணடா குழுவை எதிர்கொள்ளவிருந்த நிலையில், ரியாலின் இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படக்கூடும்.

இன்னோர் ஆட்டத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கும் அட்லெட்டிகோ மட்ரிட் குழுவை 2 கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஈபர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!