வான் டைக், சாலா கோல்களால் வீழ்ந்த மேன்யூ

லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிகளில் கடந்த 30 ஆண்டுகளாக பட்டம் வெல்லாத குறையை இந்தக் காற்பந்துப் பருவத்தில் லிவர்பூல் அநேகமாக தீர்த்துக்கொண்டுவிடும் என்ற நிலை தோன்றியுள்ளது.

அந்த இலக்கை நோக்கி அது தெளிவாக செல்வதற்கான அடையாளமாக நேற்று முன்தினம் பின்னிரவு நடைபெற்ற போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட்டை அது 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.

ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி லிவர்பூலின் தற்காப்பு வீரர் வான் டைக் உயர எம்பி தலையால் முட்டி போட்ட கோல் லிவர்பூலுக்கு முன்னிலையைப் பெற்றுத் தந்தது.

அதன்பின் முதல் பாதி ஆட்டம் மான்செஸ்டர் யுனைடெட் அணி பெரும்பாலும் லிவர்பூலின் இடைவிடாத தாக்குதலை சமாளிப்பதிலேயே இருந்தது.

இரண்டாம் பாதியில் ஆட்டத்தை முடுக்கிவிட்ட யுனைடெட் மார்சியால், ஆண்டிரியாஸ் பெரேரா ஆகிய இருவரும் கோல் போடும் வாய்ப்புகளை வீணடித்ததால் தடுமாறியது.

மான்செஸ்டர் யுனைடெட்டின் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் காயம் காரணமாக விளையாட முடியாத நிலையில் அந்த அணி மார்சியாலையே நம்பி இருந்தது. அதில் அது ஏமாற்றத்தையே கண்டது.

இறுதியில், கூடுதல் நேரத்தில் யுனைடெட்டுக்கு கிைடத்த கார்னர் வாய்ப்பில் பந்தைப் பிடித்த லிவர்பூல் கோல்காப்பாளர் அதை சாலாவை நோக்கி விரைந்து வீச சாலாவும் பந்தை எடுத்துக் கொண்டு ஓடி யுனைடெட் கோல்காப்பாளர் டி கியாவை தாண்டி கோல் போட்டு ஆட்டத்தை 2-0 என முடித்தார்.

இந்த ஆட்டம் பற்றிக் குறிப்பிட்ட லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப், “இந்த வெற்றி எங்களுக்கு பெரிய நிம்மதியை அளிக்கிறது. ஆட்டத்தின் பெரும்பகுதியில் நாங்கள் அபாரமாக விளையாடினோம்.

“அதிலும் குறிப்பாக முதல் பாதி ஆட்டத்தில், நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம். ஆட்ட மைதானத்தில் வீரர்கள் வெளிப்படுத்திய வேகம் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது.

“சாதாரண நாளில் முதல் பாதியில் மூன்று கோல்கள் போட்டிருக்க வேண்டியது. ஆனால், யுனைடெட்டிடம் ஆட்டத்திறன் இருந்தது. அவர்கள் முனைப்புடன் விளையாடத் தொடங்கியதும் நாங்கள் தற்காப்பில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது.

“பின்னர் இறுதியில் ஒரு அற்புதமான கோல் போட்டதும் உண்மையிலேயே மனதுக்கு இதமாக இருந்தது,” என்று கருத்துரைத்தார்.

மான்செஸ்டர் யுனைடெட்டின் தோல்வி குறித்துப் பேசிய அந்தக் குழுவின் நிர்வாகி ஒலே குனார் சோல்சியார், “எமது வீரர்கள் முழு சக்தியைக் காட்டி விளையாடினர். இறுதி 25-30 நிமிடங்களில் முனைப்புடன் விளையாடி லிவர்பூல் அணியை பின்னுக்குத் தள்ளினர்.

“கார்னர் வாய்ப்பில் தவறவிட்ட கோல், இறுதியில் விட்டுக் கொடுத்த கோல், இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், இதில் பல நல்ல அம்சங்கள் உள்ளன,” என்று கூறி முடித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!