தவானுக்குப் பதில் சாம்சன், பிரித்வி ஷா

புதுடெல்லி: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டுடன் ஐந்து 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி நாளை 24ஆம் தேதி ஆக்லாந்தில் நடைபெறுகிறது.

நியூசிலாந்து தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பெயர் பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நேற்று முன்தினம் மாலை வெளியிட்டது.

டி20 போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் விவரங்கள்: விராத் கோஹ்லி (அணித் தலைவர்), ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஷிவம் டுபே, குல்தீப் யாதவ், சாஹல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், கேதர் ஜாதவ்.

ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் விவரங்கள்: விராத் கோஹ்லி (அணித் தலைவர்), ரோகித் சர்மா, பிரித்வி ஷா, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஷிவம் டுபே, குல்தீப் யாதவ், சாஹல், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், கேதர் ஜாதவ்.

தோள்பட்டை காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் பங்கேற்காத ஷிகர் தவானின் டி20 இடத்திற்கு சஞ்சு சாம்சனும் ஒருநாள் போட்டிக்கான இடத்திற்கு 20 வயது பிரித்வி ஷாவும் களமிறங்க உள்ளனர். உடற்தகுதி சோதனையில் தோல்வியடைந்ததால் ஒருநாள் போட்டி அணியில் ஹர்திக் பாண்ட்யா சேர்க்கப்படவில்லை. மார்ச் மாதம் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற உள்ள போட்டிகளில் அவர் களமிறங்கக்கூடும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!