யுனைடெட் ரசிகர்கள் ஆத்திரம்

மான்செஸ்டர்: இதுவரை இல்லாத வகையில், முன்னணி இங்கிலிஷ் காற்பந்துக் குழுக்களில் ஒன்றான மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு எதிராக அக்குழுவின் ரசிகர்களே முழக்கங்களை எழுப்பியது, அக்குழுவின் முன்னாள் ஆட்டக்காரர்கள் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

யுனைடெட்டின் செயல்பாடு நாளுக்கு நாள் மங்கி வருவதே அதற்குக் காரணம். சொந்த ஓல்டு டிராஃபர்ட் அரங்கில் நேற்று அதிகாலை நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பர்ன்லி குழுவிடம் யுனைடெட் தோற்றுப்போனது. கடந்த வார இறுதியிலும் இதே கோல் வித்தியாசத்தில் யுனைடெட், முதல்நிலையில் உள்ள லிவர்பூல் குழுவிடம் மண்ணைக் கவ்வியது.

லீக்கில் 24 ஆட்டங்கள் முடிந்த நிலையில், யுனைடெட் 34 புள்ளிகளுடன் பட்டியலின் ஐந்தாமிடத்தில் உள்ளது. 1989-90 பருவத்திற்குப் பிறகு இதுவே அக்குழுவின் ஆக மோசமான செயல்பாடு. மாறாக, 1962ஆம் ஆண்டிற்குப் பிறகு ஓல்டு டிராஃபர்ட் அரங்கில் பர்ன்லி வெற்றி பெற்றிருப்பது இதுவே முதன்முறை.

இதனால் ஆத்திரமடைந்த யுனைடெட் ரசிகர்கள், தங்களது ஆட்டக்காரர்களை நோக்கியே கூச்சலிட்டனர். அத்துடன், போட்டி முடிவதற்கு முன்பே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அரங்கைவிட்டு வெளியேறி இருந்தனர்.

“அரங்கில் அரங்கேறியவற்றைப் பார்க்கும்போது அது நல்ல விஷயமாகத் தெரியவில்லை,” என்றார் முன்னாள் யுனைடெட் ஆட்டக்காரரான டேரன் ஃபிளட்சர். அதேபோல, யுனைடெட்டுக்காக ஆறு முறை இபிஎல் பட்டத்தையும் ஒருமுறை சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் வென்று தந்தவரான ரியோ ஃபெர்டினாண்ட், “இந்தச் செயல் பாட்டை என்னால் தற்காத்துப் பேச முடியாது. புதிய, திறமையான வீரர்களை வாங்க வேண்டும்,” என்றார்.

கடந்த 30 ஆண்டுகளில் தான் பார்த்த ஆக மோசமான யுனைடெட் குழு இதுதான் என்றார் முன்னாள் லிவர்பூல் வீரர் பீட்டர் கிரௌச்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!