வெற்றிப் பாதைக்குத் திரும்பிய ஸ்பர்ஸ்

லண்டன்: கடைசியாகப் பங்கேற்ற லீக் ஆட்டங்கள் நான்கிலும் வெற்றி வாசனையை நுகர்ந்திராத டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் காற்பந்துக் குழு ஒருவழியாக வெற்றிப் பாதைக்குத் திரும்பியது.

சொந்த அரங்கில் நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் ஸ்பர்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் நார்விச் சிட்டியைத் தோற்கடித்தது. ஆட்டத்தின் 38ஆம் நிமிடத்தில் டெலி அலியும் 79ஆம் நிமிடத்தில்  ஹியூங் மின் சோனும் ஸ்பர்ஸ் சார்பில் கோலடித்தனர்.

தாக்குதல் ஆட்டக்காரர்கள் பலர் காயமடைந்திருப்பதே தமது குழு தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க முடியாததற்குக் காரணம் என வருத்தப்பட்டார் ஸ்பர்ஸ் நிர்வாகி ஜோசே மொரின்யோ.

இதற்கிடையே, கடந்த வார இறுதியில் நடந்த ஆட்டத்தில் 2-1 என அதிர்ச்சித் தோல்வி கண்டதால் இரண்டாமிடத்தைப் பறி கொடுத்த லெஸ்டர் சிட்டி, நேற்றைய ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹேமை வென்று, மீண்டெழுந்தது.

Loading...
Load next