15 வயது வீராங்கனை கண்ணீருடன் விடை

15 வயது வீராங்கனை கண்ணீருடன் விடை

1 mins read
352f8b36-ab2d-4b60-9389-439683eda704
வீனஸ் வில்லியம்சை தோற்கடித்த அமெரிக்க வீராங்கனையான 15 வயது கோக்கோ கௌஃப், ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் தொடரில் நான்காம் சுற்றில் தோற்று வெளியேறினார். படம்: ஏஎப்பி -

மெல்பர்ன்: ஏழு முறை கிராண்ட் ஸ்லாம் வெற்றியாளரான வீனஸ் வில்லியம்சை முதல் சுற்றிலும் நடப்பு வெற்றியாளர் ஜப்பானின் நவோமி ஒசாகாவை மூன்றாம் சுற்றிலும் வீழ்த்திய அமெரிக்க வீராங்கனை கோக்கோ கௌஃப், 15 (படம்), ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் தொடரில் நான்காம் சுற்றில் தோற்று வெளியேறினார். சக நாட்டின் சோஃபியா கெனினிடம் 6-7, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் தோற்றதால் அழுதுகொண்டே திடலைவிட்டு வெளியேறினார் கௌஃப். இன்னோர் ஆட்டத்தில் சீனாவின் வாங் சியாங்கை 7-6, 6-1 என வென்று, கிராண்ட் ஸ்லாம் காலிறுதிக்குள் முதல் அரபுப் பெண் என்ற பெருமையைப் பெற்றார் துனீசியாவின் ஆன்ஸ் ஜபேர்.