முதலிடத்தை போராடி பிடித்த ரியால் மட்ரிட்

மட்ரிட்: ரியால் மட்ரிட், ரியால் வெலடோலிட் காற்பந்துக் குழுக்கள் மோதிய லா லீகா ஆட்டத்தில் விழுந்த ஒரே கோல் ரியால் மட்ரிட் குழுவை முதலிடத்திற்குக் கொண்டு சென்றது.

அந்த ஒரு கோலுக்காக 78 நிமிடங்கள் போராடியது ரியால் மட்ரிட்.

டோனி குரூஸ் தலையால் முட்டித் தள்ளிய பந்தை தற்காப்பு வீரர் நகோ கோல் வலைக்குள் தள்ளி, ரியாலின் போராட்டத்திற்கு நல்ல முடிவைத் தந்தார்.

கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் நகோவின் முதல் கோல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ப்ரீகிக் வாய்ப்பின் போது டோனி குரூஸ் உதைத்த பந்தை கேசிமிரோ வலைக்குள் செலுத்தியது ‘ஆப்சைட்’ என்று நிராகரிக்கப்பட்டது.

இன்னோர் ஆட்டத்தில் வெலன்சியாவிடம் 2-0 என பார்சிலோனா தோற்றது.

பெனால்டி வாய்ப்பில் வெலன்சியாவின் கோமெஸ் உதைத்த பந்தைக் கோல்காப்பாளர் தடுத்துவிட்டாலும் 48வது, 77வது நிமிடத்தில் இரண்டு கோல்கள் போட்டு தன் குழுவை அவர் வெற்றி பெறச் செய்தார்.

இதனால் 46 புள்ளிகளுடன் ரியால் மட்ரிட் முதலிடத்திற்கு முன்னேறியது. மூன்று புள்ளிகள், ஒரு கோல் வித்தியாசத்தில் பின்தங்கிய பார்சிலோனா இரண்டாம் இடத்திற்கு கீழிறங்கியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!