லிவர்பூல் 19 புள்ளி முன்னிலை

லிவர்பூல் 19 புள்ளி முன்னிலை

1 mins read

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தை லிவர்பூல் நெருங்குகிறது.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் ஹேம் குழுவை 2-0 எனும் கோல் கணக்கில் அது வீழ்த்தியது.

இதன் விளைவாக லீக் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் லிவர்பூல் 19 புள்ளி முன்னிலையைப் பெற்றுள்ளது.

ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் லிவர்பூலுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

பெனால்டியை எடுத்த நட்சத்திர வீரர் முகம்மது சாலா கிடைத்த வாய்ப்பை நழுவவிடவில்லை.

அவர் காலிலிருந்து புறப்பட்டுச் சென்ற பந்து வெஸ்ட் ஹேம் கோல்காப்பாளரைக் கடந்து சென்று வலையைத் தொட்டது.

இடைவேளையின்போது 1-0 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் ஆக்ஸ்லேட்-சேம்பர்லேன் லிவர்பூலின் இரண்டாவது கோலைப் போட்டு தமது குழுவின் வெற்றியை உறுதி செய்தார்.

இப்பருவத்தில் லிவர்பூல் 24 ஆட்டங்களில் களமிறங்கியுள்ளது. அவற்றில் 23 ஆட்டங்களில் வெற்றியையும் ஓர் ஆட்டத்தில் சமநிலையையும் அது பதிவு செய்துள்ளது. கடந்த 40 ஆட்டங்களில் தோல்வியின் பிடியில் சிக்காமல் தனது வெற்றிப் பயணத்தைத் தொடரும் லிவர்பூல் கூடிய விரைவில் லீக் பட்டத்தைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.