ஐநூறு ஆட்டங்களில் வெற்றி; புதிய வரலாறு படைத்த மெஸ்ஸி

ஐநூறு ஆட்டங்களில் வெற்றி; புதிய வரலாறு படைத்த மெஸ்ஸி

1 mins read

பார்சிலோனா: ஸ்பானிய காற்பந்து வரலாற்றில் ஐநூறு ஆட்டங்களில் வெற்றியைச் சுவைத்த முதல் ஆட்டக்காரர் எனும் மகத்தான சாதனையைப் புரிந்துள்ளார் பார்சிலோனா குழுவின் நட்சத்திர ஆட்டக்காரர் லயனஸ் மெஸ்ஸி.

பார்சிலோனாவின் நூ காம்ப் விளையாட்டரங்கில் நேற்று அதிகாலை நடந்த ஸ்பானிய அரசர் கிண்ண ஆட்டம் ஒன்றில் அக்குழு 5-0 என்ற கோல் கணக்கில் லெகானெஸ் குழுவை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் தன் பங்காக இரண்டு கோல்களைப் போட்டார் 32 வயதான மெஸ்ஸி. இதுவரை பார்சிலோனா சார்பில் 710 ஆட்டங்களில் களமிறங்கி, 500 ஆட்டங்களில் வெற்றி தேடித் தந்துள்ள மெஸ்ஸி, 623 கோல்களையும் அடித்துள்ளார்.