‘நிறைய வெற்றிகளைக் கண்டவர் மொரின்யோ’

டோட்டன்ஹம்: தனது நீண்ட கால எதிரியான மொரின்யோவை அவரது அண்மைய தோல்விகளை வைத்து மதிப்பிட்டு விடக்கூடாது என்று கூறியுள்ளார் பெப் கார்டியோலா.

மொரின்யோவின் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவும் கார்டியோலாவின் மான்செஸ்டர் சிட்டி குழுவும் இன்று நள்ளிரவு நடைபெறவுள்ள பிரிமியர் லீக் ஆட்டமொன்றில் மோதவுள்ள நிலையில் கார்டியோலா இவ்வாறு கூறியுள்ளார்.

மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் நிர்வாகி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, சுமார் ஓராண்டு கழித்து ஸ்பர்ஸ் குழுவின் நிர்வாகியாக பொறுப்பேற்ற மொரின்யோ 12 ஆட்டங்களில் 20 புள்ளிகளைப் பெற்று அக்குழுவை முன்னேறச் செய்தார்.

நான்காம் இடத்தில் பட்டியலில் உள்ள செல்சியை காட்டிலும் ஆறு புள்ளிகள் குறைவாக பெற்று ஸ்பர்ஸ் ஆறாம் நிலையில் இருந்தாலும், இப்பருவம் முடியும்போது முதல் ஐந்து இடங்களில் முடித்து அடுத்த பருவ சாம்பியன்ஸ் லீக்கிற்கு முன்னேறும் வாய்ப்பும் உள்ளது அக்குழுவிற்கு.

அதற்கு இன்றைய போட்டியில் சிட்டியை வெல்ல வேண்டியது முக்கியமாகும்.

ஆனால் நார்விச் குழுவைத் தவிர இபிஎல் தொடரின் அதற்கு முந்திய நான்கு ஆட்டங்களில் ஸ்பர்சின் வெற்றியில்லா பயணம் அக்குழுவின் நிலை குறித்து கவலை கொள்ள வைத்துள்ளது.

ஆட்டத்திற்கு முந்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய கார்டியோலா, “நிறைய அனுபவங்களும், நிறைய வெற்றிகளும் கொண்ட நிர்வாகியான மொரின்யோவை ஒரு பருவத்தையோ அல்லது ஒன்றரை பருவத்தையோ வைத்து மதிப்பிட்டு விடக்கூடாது.

“அவரது 15 முதல் 20 ஆண்டு நீண்ட கால அனுபவத்தை வைத்து தீர்மானிக்காதவர்களுக்கு எதுவும் புரியாது.

“உங்களுக்கு நல்ல, மோசமான காலங்கள் உள்ளன. நிர்வாகிகளின் வாழ்க்கையிலும் மேடு, பள்ளங்கள் உண்டு. அனைவருக்கும் இது உள்ளது” என்றார்.

டோட்டன்ஹம் குழுவின் சொந்த மைதானத்தில் நடக்கவுள்ள இந்த ஆட்டம் மொரின்யோ, கார்டியோலா சந்திக்கும் 23வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இவர்கள் இருவரும் மோதிய 22 ஆட்டங்களில் பாதிக்கும் மேல் வெற்றி பெற்றவர் கார்டியோலா.

இக்குழுக்கள் மோதிய கடைசி ஆறு இபிஎல் ஆட்டங்களில் ஸ்பர்ஸ் வெற்றி பெறவில்லை என்கின்றன புள்ளி விவரங்கள்.

இதுதவிர முக்கிய விளையாட்டாளர்களான ஹேரி கேன், சிசோக்கா, பென் டேவிஸ், சானே, மெண்டி ஆகியோர் விளையாட முடியாத நிலையில் உள்ளது மொரின்யோவிற்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

ஃபெர்னாண்டினோவும் லபோர்ட்டேவும் குணமடையும் பட்சத்தில் இன்றைய ஆட்டத்தில் விளையாட வாய்ப்புள்ளது.

ஆனால் பிஎஸ்வி ஐந்தோவன் காற்பந்துக் குழுவில் இருந்து 26.7 மில்லியன் பவுண்டுக்கு வாங்கப்பட்ட ஸ்டீவன் பெர்க்விஜின் இன்று களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்டியோலாவின் சிட்டி முதலிடத்தில் உள்ள லிவர்பூலைவிட 19 புள்ளிகள் குறைவாக பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

பட்டம் வெல்வதற்கான போட்டியில் நீடிக்க வேண்டுமானால், மூன்றாம் இடத்தில் உள்ள லெஸ்டர் சிட்டியுடனான புள்ளிகள் இடைவெளியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது சிட்டி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!