மெல்பர்ன்: ஆஸ்திரேலிய பொது விருது டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை முருகுசாவை வீழ்த்தி முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார் அமெரிக்க வீராங்கனையான சோஃபியா கெனின்.
மெல்பர்னில் நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் 4-6, 6-2, 6-2 என்ற செட்கணக்கில் முகுருசாவை வீழ்த்தினார் கெனின்.
இரண்டு முறை ஆஸ்திரேலியப் பொது விருதை வென்று இருக்கும் முகுருசா இரண்டாவது செட்டில் செய்த தவற்றைச் சரியாக பயன்படுத்திக்கொண்டு வெற்றியைத் தனதாக்கினார் கெனின்.
மரியா ஷரபோவாவிற்குப் பிறகு ஆஸ்திரேலியப் பொது விருது வென்ற ஆக இளம் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார் 21 வயது சோஃபியா கெனின்.

