மேன்யூவிற்குக் கடனாக சென்றார் இகாலோ

1 mins read

லண்டன்: இபிஎல் காற்பந்துக் குழுக்களுக்கு ஆட்டக்காரர்களை வாங்குவதற்கான காலக்கெடு முடிவடைந்த கடைசி நேரத்தில் சீன குழு ஒன்றில் இருந்து நைஜீரிய வீரரான ஓடியன் இகாலோவை கடனாக வாங்கியுள்ளது மான்செஸ்டர் யுனைடெட்.

மார்கஸ் ரேஷ்பர்ட் காயமடைந்து விளையாட முடியாத நிலையில், போர்ன்மத் குழுவில் இருந்து ஜோஷ் கிங்கை வாங்கும் முயற்சி பலனளிக்கவில்லை. இந்நிலையில், 30 வயது இகாலோவை கடனாக வாங்கியுள்ளது.

2014 முதல் 2017 வரை எவர்ட்டன் குழுவிற்காக 99 ஆட்டங்களில் விளையாடிய அவர், 39 கோல்கள் போட்டுள்ளார்.

விளையாட்டாளர்களை வாங்குவதற்கு முதலீடு பற்றாக்குறை என்று அதிருப்தியில் இருந்த மேன்யூ ரசிகர்கள், அக்குழுவின் உயர் நிர்வாக அதிகாரியான வுட்வார்ட்டின் வீட்டிற்குள் தீப்பந்தத்தை கொளுத்திப் போட்டு தாக்குதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.